வடக்கில் `0’ வரி தெற்கிற்கு மட்டும் 5% வரியா? GST-ல் வெடிக்கும் புது சர்ச்சை

x

சப்பாத்தி - பரோட்டாவுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு

அண்மையில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றத்துல இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் உள்பட பிற தென்இந்திய உணவுகளுக்கு விலக்கு அளிக்கப்படாமல் 5 சதவீத ஜிஎஸ்டி வரி தொடர்வது தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கு..இது ஒரு பாரபட்சமான அறிவிப்புன்னு ஓட்டல் உரிமையாளர்கள் குற்றச்சாட்டை முன் வைக்குறாங்க இது தொடர்பா விரிவா பார்க்கலாம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா உள்ளிட்ட உணவுகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் உள்பட பிற தென்இந்திய உணவுகளுக்கு விலக்கு அளிக்கப்படாமல் 5 சதவீத ஜிஎஸ்டி வரி தொடர்வது தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

நம் நாட்டில் கடந்த 7 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது. 5 சதவீதம், 12 சதவீதம் 18 சதவீதம், 28 சதவீதம் என்று 4 அடுக்குகளாக பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.

இதையடுத்து சமீபத்துல மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விதிப்பு முறை கைவிடப்பட்டது. அதுமட்டுமின்றி பல பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றம் செய்யப்பட்டன. இந்த மாற்றங்கள் அனைத்து செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வர உள்ளன.

சப்பாத்தி - பரோட்டாவுக்கு விலக்கு மேலும் ஜிஎஸ்டி மாற்றங்கள் பற்றி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார்.

அதன்படி பல்வேறு உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதன்படி பிளேன் ரொட்டி, சப்பாத்தி, ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, பன்னீர், யுஎச்டி பால், பீட்சா, பிரட், ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக்கப்பட்டது.

இட்லி - தோசைக்கு 5 சதவீத வரி அதேவேளையில் தென்இந்தியாவில் முக்கிய உணவுகளாக இருக்கும் இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி அப்படியே உள்ளது. நீக்கம் செய்யப்படவில்லை.

இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பாக்கெட் மாவு விற்பனைக்கான ஜிஎஸ்டி 18 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்இந்திய உணவு மட்டும் தான் குறியா? அதுமட்டுமின்றி, தென்இந்திய உணவுக்கு மட்டும் ஜிஎஸ்டியா? என்று தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தென் இந்திய உணவு வகைகளை குறிவைத்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறதா? என்று வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த ரெஸ்டாரண்ட் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவு சரியா? என கேள்வி எழுப்பி உள்னர். பொதுமக்களின் தினசரி உணவின் மீதான வரி விதிப்பில் பாரபட்சம் காட்டியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் என்ன சொல்றாங்க ‛‛இட்லி, தோசைக்கு ஜிஎஸ்டியில் வரி விலக்கு அளிக்கப்படவில்லை. இது பாரபட்சமான முடிவாகும்.

வடமாநிலங்களில் எப்படி சப்பாத்தி தினசரி உணவாக இருக்கிறதோ.. அதேபோல் தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் இட்லி, தோசை முக்கிய உணவாக உள்ளது.

இப்படி இருக்கும்போது சப்பாத்தி, இட்லி, தோசைக்கு இடையே ஜிஎஸ்டியில் வேறுபாடு காட்டியது ஏன்? என்று தெரியவில்லை.

அதேபோல் பாக்கெட் மாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது. இது அதனை சார்ந்து இருக்கும் விற்பனையாளர்களுக்கு பிரச்சனையாக மாறும்'' கருத்து சொல்றாங்க..

"இங்குள்ள குடும்பங்களுக்கு இது வடக்கில் உள்ள சப்பாத்தியைப் போலவே தினசரி உணவு. அவர்கள் ஏன் வித்தியாசமாக நடத்தப்பட வேண்டும்? மாவுக்கு 18% வரி விதிக்கப்படும் போது அதை நம்பியிருக்கும் சிறிய கடைகளுக்கு அது இன்னும் கடினமாகிறது.


Next Story

மேலும் செய்திகள்