4வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண் - தீவிர சிகிச்சை
சென்னையில் காதல் விவகாரத்தில், 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலத்தை சேர்ந்த ஆனி ஏஞ்சலினா என்கிற 23 வயதான இளம்பெண், சேப்பாக்கம் மைதானம் அருகே உள்ள தனியார் விடுதியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரியில் உடன் படித்த பரத் என்பவரை அவர் காதலித்து வந்ததும், இருவருக்கும் இடையிலான பிரச்சினையில் ஆனி ஏஞ்சலினாவை அந்த இளைஞர் ப்ளாக் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் பணிபுரியும் காதலனை சந்திப்பதற்காக ஆனி ஏஞ்சலினா ஊரில் இருந்து வந்த நிலையில், அந்த இளைஞர் சந்திக்க வராத விரக்தியில் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆனி ஏஞ்சலினாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
