Iran Israel War | ஈரான் போரில் முக்கிய தருணம் - துருக்கி, கத்தார் திடீர் ஆதரவு

ஈரான் போரில் முக்கிய தருணம் - துருக்கி, கத்தார் திடீர் ஆதரவு

#iranuswarupdate #iranisraelwar திங்கட்கிழமை மீண்டும் அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தை அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் திங்கட்கிழமை மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது... இதற்காக இருநாட்டுப் பிரதிநிதிகளும் அங்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... இந்த ராஜதந்திர முயற்சியைப் பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் நிலையில், கத்தார் அமீர் மற்றும் துருக்கி அதிபர் ஆகியோர் பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்துத் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து இதில் முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே 10 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் உறுதி செய்துள்ள நிலையில், அடுத்த சந்திப்பு மேற்கு ஆசியாவில் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com