கடற்கரையில் யோகா... உள்ளே இழுத்து சென்ற ராட்சத அலை... பிரபல நடிகை பலி

x
  • தாய்லாந்து கடற்கரையில் உள்ள பாறையில் அமர்ந்து யோகா செய்த ரஷ்ய நடிகை கமில்லா பெல்யாட்ஸ்கயா ராட்சத அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கோ சமுய் தீவில் உள்ள லட்கோ வியூ பாயின்ட்டில் மிகப்பெரிய பாறையின் மீது அமர்ந்து யோகா செய்து கொண்டிருந்தார் கமில்லா... அப்போது அவர் மீது அடித்த 9 அடி உயர ராட்சத அலை, அப்படியே கமில்லாவை கடலுக்குள் இழுத்துச் சென்றது... எவ்வளவோ முயன்றும் கமில்லாவால் தப்ப முடியாத நிலையில், அவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 3 மைல் தொலைவில் அவரது சடலம் கரை ஒதுங்கியது... இறந்த கமில்லாவுக்கு இன்னும் 2 வாரங்களில் திருமணம் நடைபெறவிருந்தது... அதைக் கொண்டாட சுற்றுலா சென்றிருந்த போதுதான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்