Asim Munir| உலகின் செல்வாக்குமிக்க இஸ்லாமியர்கள்.. முதலிடத்தில் இவரா.. சவுதி இளவரசருக்கே டஃப்

உலகின் செல்வாக்குமிக்க இஸ்லாமியர்கள்.. முதலிடத்தில் இவரா.. சவுதி இளவரசருக்கே டஃப்

#asimmunir #mohammadbinsalman பாகிஸ்தான் பிரதமர், பாக். ராணுவ தளபதிக்கு முதலிடம் உலகின் மிகவும் செல்வாக்குமிக்க 500 இஸ்லாமியர்களின் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் முதலிடத்தை பிடித்துள்ளனர். ​ஜோர்டான் நாட்டை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று, ஒவ்வொரு ஆண்டும் உலகின் செல்வாக்குமிக்க 500 இஸ்லாமியர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2027ஆம் ஆண்டுக்கான புதிய பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், சவுதி அரேபிய மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருடன் இணைந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருக்கும் கூட்டாக முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.​சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து கையெழுத்திட்ட 'மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தமே' இவர்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ​

X