World News ரஷ்யாவுக்கு ஷாக் கொடுக்க நினைத்த உலகநாடுகளுக்கு பெரும் ஷாக்..`சாம்பல் சந்தை’ ரிப்போர்ட்
ரஷ்யாவுக்கு ஷாக் கொடுக்க நினைத்த உலகநாடுகளுக்கு பெரும் ஷாக்... தலையில் கைவைத்து உட்கார வைத்த `சாம்பல் சந்தை’ ரிப்போர்ட் ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளை மீறி, வெளிநாட்டு கார்கள் சீனா வழியாக ரஷ்யாவுக்கு பெருமளவில் சென்று கொண்டிருக்கின்றன. எப்படி? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்... 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்கு பதிலடியாக, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் விலை உயர்ந்த மற்றும் பெரிய என்ஜின் கொண்ட வாகனங்கள், மின்சார மற்றும் ஹைப்ரிட் கார்கள் ஆகியவற்றின் ரஷ்ய ஏற்றுமதிக்கு தடைகள் விதித்தன... பல முன்னணி கார் நிறுவனங்களும் ரஷ்ய சந்தையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தன. ஆனால் தரவுகள் பல அதிர்ச்சிகர தகவல்களை தெரிவிக்கின்றன... சீனாவின் மூலம் “கிரே மார்க்கெட்" எனப்படும் அதிகாரப்பூர்வமற்ற சந்தையான சாம்பல் சந்தை வழியாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டு கார்கள் ரஷ்யாவுக்கு தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன... சீனாவில் தயாரிக்கப்படும் கார்கள் மற்றும், சீனாவில் உருவாக்கப்படும் ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பிராண்டுகளின் கார்கள் ரஷ்யாவுக்கு மாற்று வழிகளில் அனுப்பப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன... புதிய கார்கள் சீனாவில் விற்கப்பட்டதைப் போல் பதிவு செய்து, பின்னர் அவற்றை “zero-mileage used“ என வகைப்படுத்தி ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வது தெரிய வந்துள்ளது...
