

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஜெனிவாவில், செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், அதே சமயம், செல்லபிராணிகளை வளர்ப்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அது உடனடியாக, பிராணிகளை பாதிக்கும் என தெரிவித்தார்.