வேர்ல்டு கேம்ஸ் தொடர்- தங்கம் வென்ற சீன வீரர்கள்
வேர்ல்டு கேம்ஸ் தொடர்- தங்கம் வென்ற சீன வீரர்கள்
சீனாவில் நடைபெற்ற வேர்ல்டு கேம்ஸ் விளையாட்டில், பிரேக்கிங், ஸ்கேட்டிங் ஆகிய போட்டிகளில் சீனா தங்கப் பதக்கம் வென்றுள்ளது. heasdspin மற்றும் acrobatic போட்டிகளில், சீனாவை சேர்ந்த இளைஞனும், இளம்பெண்ணும் வெற்றி பெற்றனர். இதேபோன்று, skating போட்டியில் சீனாவை சேர்ந்த வீரரும், வீராங்கனையும் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.
பெய்ஜிங்கில் 3 நாட்கள் நடந்த 'ரோபோ ஒலிம்பிக்' நிறைவு
சீன தலைநகர் பெய்ஜிங்கில் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற ரோபோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. 16 நாடுகள், 280 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், ரோபோக்கள் கால்பந்து, தடகளம், டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் அசத்தின. இத்துடன் மருந்துகளை வரிசைப்படுத்துதல், துப்புரவு சேவைகள் உள்ளிட்ட நடைமுறை சவால்களிலும் ரோபோக்கள் கலந்துகொண்டன. அமெரிக்காவுடன் போட்டியிட மனித உருவ ரோபோக்களில் சீனா பெரும் முதலீடு செய்து வருவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இங்கிலாந்து- புல் அறுக்கும் இயந்திரங்கள் கொண்டு விநோத ரேஸ்
இங்கிலாந்தில் புல் அறுக்கும் இயந்திரங்களை கொண்டு அதிவேகப் பந்தயம் நடைபெற்றது. விடிய விடிய சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற இந்த பந்தயத்தில் 40 அணிகள் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் வெப்ப அலையால் வறண்டு காணப்படும் நிலப்பரப்பில் இந்த போட்டி நடத்தப்படுவது வழக்கம் என்ற நிலையில், இம்முறை வெற்றியாளர் மீது தண்ணீர் வாரி இறைக்கப்பட்டது.
