விம்பிள்டன் டென்னிஸ் - 4 ஆண்டுகளுக்குப் பின் களமிறங்கும் செரீனா வில்லியம்ஸ்

Summary

அமெரிக்காவின் டென்னிஸ் நட்சத்திரமும், 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் , நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புகழ்பெற்ற விம்பிள்டன் தொடருக்குத் திரும்புகிறார்.

ஆல் இங்கிலாந்து கிளப் அவருக்கு மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாட 'வைல்ட்கார்ட் அனுமதியை வழங்கியுள்ளது.

​டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த 44 வயதான செரீனா வில்லியம்ஸ், இந்த மாதம் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் தொடர் மூலம் மீண்டும் களம் திரும்பினார்.

இம்முறை விம்பிள்டன் தொடரில் தனது மூத்த சகோதரி வீனஸ் வில்லியம்ஸுடன் இணைந்து செரீனா இரட்டையர் பிரிவில் களம் காண்கிறார். இந்த ஜோடி ஏற்கனவே விம்பிள்டனில் 7 முறை இரட்டையர் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com