"வாக்காளர் வயது 16 ஆக குறைகிறது?''
பிரிட்டனில் நாடாளுமன்ற ஒப்புதலுடன் "பிரிட்டனில் வாக்காளர் வயது 16 ஆக குறைகிறது"
பிரிட்டனில் நாடாளுமன்ற ஒப்புதலுடன் வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஏற்கனவே ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் 16 வயதுடையவர்கள் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்து வரும் நிலையில், இனி பிரிட்டன் முழுவதும் 16 வயது முதலே வாக்காளர்கள் அனைத்து வித தேர்தலிலும் வாக்களிக்கும் உரிமையைப் பெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் இனி வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி பிரிட்டன் அரசால் விநியோகிக்கப்பட்ட வங்கி கார்டுகள், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட இருப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
Next Story
