Israel | Iran வெடிக்குமோ அடுத்த புது யுத்தம்? உலகையே அலறவிட்ட இஸ்ரேல் - கை கோர்த்த US, UK, ஜோர்டன்
வெடிக்குமோ அடுத்த புது யுத்தம்?
உலகையே அலறவிட்ட இஸ்ரேல்
கை கோர்த்த US,UK,ஜோர்டன்
சர்வதேச அளவுல பெரும் கவனத்த ஈர்த்த நிகழ்வா அமஞ்சிருக்கு ஈரான்ல இஸ்ரேல் இன்னிக்கு நடத்துன வான்வழி தாக்குதல். இது மத்திய கிழக்கு நாடுகள்ள நிச்சயமா பதற்றத்த ஏற்படுத்திருக்குன்னு தான் சொல்லனும். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் வெச்சிருக்கர பேரு “ ஆபரேஷன் ரைசிங் லயன்“. குறிப்பா ஈரானோட மிக முக்கியமான அணு செரிவூட்டல் நிலையத்த இஸ்ரேல் தாக்கியிருக்கு. இதுல என்ன நடந்ததுன்னு முதல்ல பார்க்கலாம்.
ஈரான் தலைநகர் டெஹ்ரான்ல அதிகாலைல நடந்த இந்த தாக்குதல்ல, ஈரானோட பல பகுதிகள்ள இருக்கர இராணுவ இலக்குகளும், அணு ஆயுத இலக்குகளும் தாக்கப்பட்டதா தகவல் வெளியாச்சு. இந்த தாக்குதல் நடந்தப்ப குடியிருப்பு பகுதிகள்ள குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாவும் சொல்லப்படுது.
டெஹ்ரான்ல இருந்து தெற்கே சுமார் 225 கிமீ தொலைவுல இருக்கு நடான்ஸ்ங்கர நகரம். இது ஈரான் நாட்டோட நடு பகுதியில அமஞ்சிருக்கர இஸ்ஃபஹான்ங்கர மாகாணத்துல இருக்கர நகரம்.
இங்க அமஞ்சிருக்கர மிக முக்கிய அணுசக்தி நிலையத்துல தாக்குதல் நடத்தப்பட்டிருக்கரதா ஈரான் தரப்புல தெரிவிக்கப்பட்டிருக்கு. இத சர்வதேச அணுசக்தி நிறுவனமான ஐஏஇஏவும் உறுதிபடுத்திருக்கு. முக்கியமா இந்த தளத்துல நடந்த தாக்குதலுக்கு அப்பரம் எந்தவித கதிர்வீச்சு அளவு அதிகரிப்பு இல்லன்னு அப்படீன்னும் தெரிவிக்கப்பட்டிருக்கு.
இந்த தாக்குதல்ல இஸ்லாமிய புரட்சிகர காவல்படையோட தளபதி ஹொசைன் சலாமி, தலைமை அதிகாரி முகமது பாகேரி இதுபோல பல உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுருக்கரதா தகவல் வெளியாகிருக்கு.
இவங்கள்ளாம் வெறும் இராணுவ உயர் அதிகாரிகள் மட்டும் கிடையாது பிராந்திய செல்வாக்கு முயற்சிகள்ள முக்கிய பங்கு வகிக்ககூடியவங்கன்னும் சொல்லப்படுது.
இந்த தாக்குதல பத்தி இஸ்ரேல் என்ன சொல்ராங்கன்னா, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கரத தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இந்த தாக்குதல்னு இஸ்ரேல் தரப்புல சொல்லப்படுது.
அணு ஆயுதம் தயாரிக்க யுரேனியம் செறிவூட்டல் அளவுங்கரது 90% இருக்கனும். இப்ப ஈரான் அதுல கிட்டதட்ட நிறைவு பெற்றிடுச்சு, அதாவது 70% யுரேனியம் செரிவூட்டல் அளவுக்கு வந்துருச்சுன்னு சொல்ர இஸ்ரேல் சமீபத்துல சர்வதேச அணுசக்தி முகமை, ஈரான் அணு ஆயுதம் தயாரிப்புல காட்டக்கூடிய தீவிரத்த பத்தி எச்சரிச்சதையும் சுட்டிக்காட்டுது. அதனால என்ன விலை கொடுத்தாவது இத ஹடுக்கரதுல தீவிரம் காடுன இஸ்ரேல், இந்த தாகுதல முன்னெடுத்திருப்பதா சர்வதேச வல்லுநர்கள் சொல்ராங்க. நாம இப்ப செயல்படலன்னா அப்பரம் செயல்படரதுக்கு வேற தலைமுறையே இல்லாம கூட போகலாம்னு இஸ்ரேல் பிரதமர் நெடன்யாகு பேசுனதா கூட சொல்லப்படுது.
இந்த தாக்குதலுக்கு நிச்சயமா எதிர் தாக்குதல் நடத்த தயாராகிட்டு வரும் ஈரான்னு அச்சப்படர நிலையில இஸ்ரேல் அதுக்கு எல்லா வகையிலயுமே தயாரிகிட்டு வருது. இந்த நிலையில இரண்டு தரப்புலயும் இருக்ககூடிய இராணுவ பலம் என்னங்கரது பத்தி விரிவா பார்க்கலாம்.
