Israel Iran War | Putin | Russia l இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? - ரஷ்யா சந்தேகம்

x

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது என்றும், அதே வேளையில் இந்த போர் நிறுத்தம் நீடிக்குமா என தெரியவில்லை என்றும் ரஷ்யா சந்தேகம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்து அறிவித்த பிறகும் இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்தப் போர் முடிவுக்கு வருவது சாத்தியமானது இல்லை என்றும் எந்தவொரு முடிவையும் தற்போது உறுதிப்படுத்த முடியாது என்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ( Sergei Lavrov) தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், மீண்டும் இருவரும் தாக்குதலில் ஈடுபட்டது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். குண்டுகளை வீச வேண்டாம் என்று இஸ்ரேலை எச்சரித்துள்ள டிரம்ப், உடனடியாக தங்கள் நாட்டு விமானிகளை திருப்பி அழைக்குமாறும், இது மிகப்பெரிய விதிமீறல் என்றும் இஸ்ரேலை அறிவுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்