கிரிக்கெட் உலகமே எதிர்நோக்கும் WTC Final RCB போல் சாதிக்குமா SA?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் இன்று தொடங்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஜூன் முதல் 2025ம் ஆண்டு பிப்ரவரி வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் போட்டிகள் நடைபெற்றன.
இதன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது இடத்தை கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பிடித்தன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு பேட்டிங்கில் பவுமா, மார்க்ரம், ஸ்டப்ஸ், ரிக்கல்டன் பலம் சேர்க்கின்றனர். பவுலிங்கில் ரபாடா, யான்சென், கேசவ் மகாராஜ் உறுதுணையாக உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி ஹெட், கவாஜா, ஸ்மித், லபுஷேன் என நட்சத்திர பேட்டிங் லைன் அப்பைக் கொண்டுள்ளது. பவுலிங்கில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் மிரட்ட காத்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா,, ஐசிசி தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வென்று 27 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் நெடுநாள் ஏக்கத்தை தணித்து பவுமா படை சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மறுபுறம் 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல ஆஸ்திரேலியா தீவிரம் காட்டக் கூடும் என்பதால் இந்த இறுதிப்போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது.