``முற்றிலுமாக அழியும்’’ - அந்நியனாக மாறிய டிரம்ப்புக்கு வந்த எதிர்பாரா ஆதரவு

x

பரஸ்பர வரி- ஆதரவாக பேசிய நீதிபதிக்கு டிரம்ப் பாராட்டு

உலக நாடுகளுக்கு அமெரிக்கா வரி விதித்ததற்கு எதிரான வழக்கில், தனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நீதிபதிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், டிரம்ப்பின் வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், வரி விதிப்பு இல்லையெனில் நமது நாடு முற்றிலுமாக அழிந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற விசாரணையின்போது, மொத்தமுள்ள 7 நீதிபதிகளில் 4 பேர் நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்த நிலையில், முன்னாள் அதிபர் ஒபாமா நியமித்த ஒரு நீதிபதி மட்டுமே தனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்டார். அமெரிக்காவை நேசிக்கும் அவருக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்