Bangladesh Election வரலாற்றை மாற்றி எழுதுமா வங்கதேசம்? - தலைகீழாக மாற்ற மக்கள் கைக்கு வரும் அதிகாரம்
வங்கதேசத்தில் பிப்.12ம் தேதி நாடாளுமன்ற தேர்தல்
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீர் உத்தீன் வெளியிட்டுள்ள இது தொடர்பான அறிவிப்பில் நாடாளுமன்ற தேர்தலுடன் முக்கிய ஜனநாயக சீர்திருத்தங்கள் குறித்த தேசிய வாக்கெடுப்பும் அதே நாளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
