Iran US War | ஈரான் போரால் அமெரிக்காவுக்கு என்னென்ன இழப்பு? - முதல்முறையாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஈரான் போரால் அமெரிக்காவுக்கு என்னென்ன இழப்பு? - முதல்முறையாக பென்டகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு #iranwar #iranuswar ஈரான் உடன் மோதலில் 25 பில்லியன் டாலர் இழப்பீடு என அமெரிக்கா தகவல் ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் தற்போது தொலைபேசி வாயிலாக நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். "ஈரான் தனது அணு ஆயுதக் கனவைக் கைவிட்டுச் சரணடைய வேண்டும்" என எச்சரித்துள்ள அவர், ஈரானின் ஏவுகணை வசதிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இந்த மோதலால் அமெரிக்காவிற்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவாகியுள்ளதாக பென்டகன் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மறுபுறம், அமெரிக்காவுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால், உலகப் பொருளாதாரத்திலும் எண்ணெய் விநியோகத்திலும் பெரும் பதற்றம் நிலவுகிறது.
