``எந்த மூஞ்ச வச்சிகிட்டு இனி கேப்பேன்'' - விரக்தியில் காஷ்மீர் CM

x

எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்பேன்? என ஜம்மு கஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வேதனை தெரிவித்துள்ளார். பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அது குறித்து விவாதிப்பதற்காக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஒரு நாள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய

ஜம்மு கஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா , இந்தப் படுகொலை எங்களை உள்ளுக்குள் வெறுமையாக்கி விட்டதாக கவலை தெரிவித்த அவர், தற்போதைய சூழலில் ஜம்மு காஷ்மீருக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்று தாம் கோரிக்கை விடுக்க மாட்டேன் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்