என்னது இவங்க பொண்ணா?..1 அடி நீள தாடி.. கின்னஸ் சாதனை..ஆண்களே பொறாமை கொள்ளும் Beard ராணி

x

அடர்த்தியாக வளர்ந்த தாடியுடன், நீங்கள் பார்க்கும் நபர், ஒரு பெண்மணி என்பதை கேட்பதற்கு சற்று ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் உண்மையும் கூட.

38 வயதான எரின் ஹனிகட் என்ற பெண்மணிக்கு ஏற்பட்டுள்ள வினோத நோயின் தாக்கம் தான், அவருடைய முகத்தில் தாடியாய் பிரதிபலிக்கிறது.

இன்றைய இளைஞர்கள் விதவிதமான ஸ்டைலில் தாடி வளர்த்து வருகின்றனர்.

சிலரோ எனக்கு தாடி வளரவே மாட்டேங்குதுப்பா என்று ஆதங்கப்பட்டும் வருகின்றனர்.

காதல் தோல்வியால் தாடி வளர்ப்பவர்களும் அதிகம்.

இந்நிலையில்,

உலகிலேயே மிக நீளமான தாடி வளர்த்துள்ள பெண் என்ற வினோதமான சாதனைக்கு சொந்தக்காரராகி உள்ளார் அமெரிக்காவை சேர்ந்த எரின் ஹனிகட்.

எரின் ஹனிகட்க்கு டீன் ஏஜ் பருவம் முதலே, கர்ப்பப்பையில் "பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்" என்ற கர்ப்பப்பை கட்டி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலில் அளவுக்கு அதிகமாக முடி வளர்ந்து வருகிறது.

இதன் காரணமாக இவரது முகத்தில் ஆண்களை போல் மீசை மற்றும் தாடி வளர்ந்து வருகிறது.

அந்த வகையில், 11. 8 இன்ச் நீளத்திற்கு, கிட்டத்தட்ட ஒரு அடிக்கு தாடி வளர்ந்துள்ளது.

இதுவரை, 75 வயதான விவியன் வீலர் என்ற பெண்மணி 10.04 இன்ச் நீளத்திற்கு தாடி வளர்த்திருந்ததே உலக சாதனையாக இருந்து வந்த நிலையில்,

கடந்த பிப்ரவரி மாதம் அந்த சாதனையை முறியடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் எரின் ஹனிகட்.

ஆனால், அவருடைய தாடிக்கு பின்னால் இருக்கும் அவருடைய வலி நிறைந்த வாழ்க்கை சோகத்தின் உச்சம்...

ஆண்கள் கூட நாள் ஒன்றுக்கு, அதிகபட்சமாக ஒரு முறைக்கு மேல் ஷேவ் செய்யாத நிலையில்,

ஒருநாளைக்கு 3 முறை ஷேவ் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் இந்த பெண்மணி.

high b.p பாதிப்பால், இவரது பார்வைத்திறனில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ஷேவ் செய்யும் பழக்கத்தையும் நிறுத்திவிட்டார். அதன் பயனாய் வளர்ந்த அடர்த்தியான தாடியால், தனது குறைபாட்டையே கின்னஸ் சாதனையாக மாற்றி அசத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்