"பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது" - 3 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூட்டாக அறிக்கை

பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாது என இந்தியா, சீனா, ரஷ்யா கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது
"பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது" - 3 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூட்டாக அறிக்கை
Published on
பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாது என இந்தியா, சீனா, ரஷ்யா கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவின் வூசென் நகரில், இந்தியா, ரஷ்யா, சீன நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 16-வது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை கண்டிக்கப்பட வேண்டியது என அதில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு, ஆதரவளிப்பது, அவற்றில் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபடும் நாடுகள், அதற்கு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 3 நாடுகளின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு உதவி செய்வோர் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com