North Korea | Kim Jong Un | ``நாங்கள் தான் அனுப்பினோம்..'' - பகிரங்கமாக அறிவித்த கிம்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு படைகளை அனுப்புவதை முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ள வடகொரியா, தனது வீரர்களை ஹீரோக்கள் என்று பாராட்டியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் உத்தரவுப்படி படைகள் அனுப்பப்பட்ட நிலையில், உக்ரைனால் ஆக்கிரமிக்கப்பட்ட ரஷ்ய பகுதியை விடுவிப்பதில் முக்கிய பங்களிப்பை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம் ஜாங் உன், கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதினுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி படைகள் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, வடகொரியா 14 ஆயிரம் வீரர்களை அனுப்பியுள்ளதாக, உக்ரைன் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
