நேரலையில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பாக். பாதுகாப்பு அமைச்சர்

x

’தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்து வருகிறோம்“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிர்ச்சி பதில்

ஜம்மு கஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதற்கு பின்னால் அமெரிக்கா இருப்பதாக குற்றம் சாட்டி வரும் இந்தியா அதன் மீது அடுக்கடுக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃபிடம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது நிதி உதவி அளிப்பது பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நீண்ட கால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டிருப்பதாக நெறியாளர் யால்டா ஹக்கீம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் இந்த மோசமான காரியத்தை கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவிற்காக செய்து வருவதாக குறிப்பிட்டார்.

அமெரிக்கா மட்டுமின்றி பிரிட்டன் உட்பட மேற்குலக நாடுகளுக்காகவும் செய்து வருவதாக குறிப்பிட்ட அவர் அது தவறு எனவும் அந்த தவறால் தாங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்