Warner Bros | Netflix போட்ட டீலால் திடீர் சிக்கல்

x

நெட்ஃபிளிக்ஸ் ஒப்பந்தம் தொடர்பாக வார்னர் பிரதர்ஸ் Warner Bros., டிஸ்கவரி Discovery நிறுவனம் மீது பாரமவுண்ட் ஸ்கை டான்ஸ் Paramount Skydance நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தின் ஸ்ட்ரீமிங் மற்றும் ஸ்டூடியோ பிரிவுகளை சுமார் 83 பில்லியன் டாலருக்கு வாங்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் குறித்த நிதி விவரங்களை வெளியிட வேண்டும் என பாரமவுண்ட் ஸ்கைடான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

சுமார் 108 பில்லியன் டாலருக்கு வாங்குவதாகக்கூறிய பாரமவுண்ட் நிறுவனத்தின் ஆஃபரை நிராகரித்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், அது வெறும் கடன் சுமையைத் தான் தரும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்