Iran US War | டிரம்பே எதிர்பாரா அடி.. இறங்கி வெளுக்கும் ஈரான்.. ரத்த களறியாகும் ஹார்முஸ்

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா தலையிட விடமாட்டோம் - ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஈரான் ஒருபோதும் அனுமதிக்காது என்றும், தங்களின் அனுமதியின்றி கப்பல்களை இயக்க முயன்றால் அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் ராணுவத் தலைமையகம் எச்சரித்துள்ளது. ​ ஈரான் நிர்ணயிக்கப்பட்ட வழிகளை தாண்டியோ, ஈரானிய ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்பு இல்லாமலோ அமெரிக்கா கப்பல் போக்குவரத்தை நடத்த முயன்றால், அது வலுவாக முறியடிக்கப்படும்" என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதற்குப் பாதுகாப்புக் கட்டணமாக 20% வசூலிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில் ஈரானிடம் இருந்து இந்த எதிர்வினை வந்துள்ளது. இந்த பதற்றத்திற்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகள் தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் ஈடுபட்டு நேரடியாக மோதிக்கொண்டன. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் கேள்விக்குறியாகியுள்ளதுடன், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com