போர்க்குற்றத்தில் தண்டிக்க இடமளிக்க முடியாது : இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதி

ரத்தம் சிந்தி, நாட்டை மீட்டெடுத்த உத்தமர்கள் என இலங்கை ராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் சிறிசேனா பாராட்டியுள்ளா
போர்க்குற்றத்தில் தண்டிக்க இடமளிக்க முடியாது : இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதி
Published on
ரத்தம் சிந்தி, நாட்டை மீட்டெடுத்த உத்தமர்கள் என இலங்கை ராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் சிறிசேனா பாராட்டியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ராணுவத்தினர் போர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பது தான் தனது நிலைப்பாடு எனவும் ஒருபோதும் ராணுவத்தை தண்டிக்க இடமளிக்க மாட்டேன் எனவும் கூறினார். மேலும், தான் ஆட்சியில் இருக்கும் வரை அது ஒருபோதும் நடைபெறாது என்றும் உறுதியாக தெரிவித்தார். சில வெளிநாடுகள் தேவையின்றி இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும், இலங்கை ராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com