வெளிநாடு செல்ல விசா வேண்டுமா?

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விசா பெற சமூக வலைத்தளங்களில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்ற அம்சமும் இனி ஆராயப்படும் என்ற தகவல் வெளியாக உள்ளது.
வெளிநாடு செல்ல விசா வேண்டுமா?
Published on

பாஸ்போர்ட் வாங்கும் போது, காவல் நிலையங்களில் நம் மீது வழக்கு ஏதேனும் உள்ளதா என்று ஆராயப்படுவது போல், இனி விசா பெறும் நபர் சமூக வலைத்தளத்தில், எந்த கருத்துக்களை பதிவிட்டுள்ளார், நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கக் கூடிய நபரா உள்ளிட்ட அம்சங்கள் ஆராயப்பட உள்ளது. இதனை அமெரிக்கா ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 30 ஆயிரம் பேரின் சமூக வலைத்தள பக்கங்கள், 'விசா' அளிப்பதற்காக ஆராயப்பட்டுள்ளன.

கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. விசா பெறுவோர் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆதரவு அளிக்கிறார்களா என்று பிரிட்டன் ஏற்கனவே கண்காணிக்கிறது. எனவே சமூக வலைத்தளத்தில் பொறுப்புடன் செயல்படுவது அவசியம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com