100க்கும் மேற்பட்ட பழமையான ரேஸ் கார்கள் ஏலம்

x

பிரான்சில், நூற்றுக்கும் மேற்பட்ட பழமையான ரேஸ் கார்கள் ஏலம் விடப்பட்டன. பாரீசில் நடைபெற்ற ஏலத்தில், ஃபெர்ராரி (Ferrari), புகாட்டி (Bugatti), போர்ஷே (Porsche) நிறுவனங்களை சேர்ந்த பழமையான ரேஸ் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கார் ஆர்வலர்கள், போட்டிப்போட்டு ஏலம் எடுத்தனர். 1950 மற்றும் 1955ஆம் ஆண்டை சேர்ந்த அரிதான 2 ஃபெர்ராரி மாடல் (Ferrari) கார்கள், 55 கோடி ரூபாய் வரை விலை போயின. ஏலத்தில் எடுக்க முடியாதவர்கள், கார்களை படம் பிடித்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதே போன்று, அர்ஜென்டினா கால்பந்து வீர‌ர் லியோனல் மெஸ்ஸி ஆரம்ப காலத்தில் 1999ஆம் ஆண்டு அணிந்திருந்த ஜெர்ஸியும் (jersey) ஏலம் விடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்