வெறி ஏத்திவிட்ட விக்ரம் ..இன்றே நிலாவுக்கு பாயவிருந்த ஜப்பான்..கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

x

சந்திரயான் -3 மற்றும் ரஷ்யாவின் லுனாவை தொடர்ந்து... அடுத்து இந்த மாதம் ஜப்பானின் தனது நிலவு பயணத்தை மேற்கொள்ள இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக ஜப்பானின் நிலவு திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை தன்வசமாக்க ஆயத்தமாகி வருகிறது, ஜப்பான்..

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது முதல் நிலவு பயணத்தை தொடங்கிய ஜப்பானின் தனியார் விண்வெளி நிறுவனமான 'ஐஸ்பேஸ்', சந்திரயான்-2வை போல் கடைசி நிமிடத்தில் லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியதால் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், தற்போது நிலவில் தரையிறங்க ஜப்பான் விண்வெளி நிறுவனமான 'ஜாக்சா'வின் 'SLIM Moon Sniper lander' ஆயத்தமாகி வருகிறது.

SLIM என்ற பெயருக்கு ஏற்றவாறு,சுமார் ஒன்பதடி உயரத்தில் வெறும் 590 கிலோ எடையில் இலகுவான அமைப்பு மூலம் இதன் விண்கலம் தயாராகி இருப்பது தான் இதன் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

விண்கலத்துடன் எக்ஸ்-ரே இமேஜிங் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷன் பயணிப்பதன் மூலம் பிரபஞ்சத்தின் உருவாக்கம் குறித்து பல தகவல்கள் நமக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் இந்திய நேரப்படி ஆகஸ்ட் 26 ஆம் தேதி, காலை 6.04 மணி அளவில் நிலவில் தரையிறங்குவதற்கான பயணம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மோசமான வானிலை காரணமாக ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 8.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிலவை நோக்கி ஜப்பான் அனுப்பும் இந்த விண்கலம்... வருகின்ற ஜனவரி மாதம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரயான் -3 வெற்றிக்கு பிறகு அடுத்து, இஸ்ரோ ஜப்பானுடன் கைகோர்க்கும் லூபெக்ஸ் திட்டத்தில், இரு நாடுகளும் இணைந்து நிலவிற்கு விண்கலம் அனுப்பி சாம்பிள் எடுத்து வர திட்டமிட்டு இருப்பதால்... ஜப்பானின் இந்த நிலவு பயணத்தை இஸ்ரோவும் உன்னிப்பாக கவனித்துவருகிறது.


Next Story

மேலும் செய்திகள்