

தொழிலதிபர் விஜய் மல்லய்யா, லண்டன் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக ஆஜராகி தன் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார். 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி செய்ததாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்ததை அடுத்து, விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி ஓடினார். இந்த நிலையில் இந்தியாவுக்கு அவரை நாடு கடத்த லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஜாமின் பெற்ற விஜய்மல்லய்யா, தீர்ப்பை எதிர்த்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை 2வது நாளாக தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.