விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்த பலர், தற்போது இலங்கை ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன், ராணுவத்துடன் இணைந்து செயல்படுவதால் முன்னாள் போராளிகளின் வாழ்க்கை தரம் உயர்ந்தாலும், அவர்கள் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.