Venezuela | புதிய சட்டத்திருத்தம் - ஒப்புதல் வழங்கிய இடைக்காலஅதிபர்
எண்ணெய் சட்ட சீர்திருத்தம்- வெனிசுலா அதிபர் கையொப்பம்
வெனிசுலாவில் எண்ணெய் வர்த்தகத்தில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்க வழிவகுக்கும் சட்டத் திருத்தத்துக்கு, அந்நாட்டு இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் எண்ணெய் பொருள்கள் மீதான வரி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெனிசுலா வான்வெளியை வணிக நோக்கில் விமான சேவைக்காக திறப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னிடம் உறுதியளித்ததை தொடர்ந்து, இந்த சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால அதிபர் டெல்சி கையொப்பமிட்டுள்ளார்.
Next Story
