Venezuela | வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த மெசேஜ்

x

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த மெசேஜ்

அமெரிக்க அரசுக்கு வெனிசுலா இடைக்கால அதிபர் வேண்டுகோள்

ஒத்துழைப்போடு அரசை வழிநடத்த வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அமெரிக்க அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்...

வெனிசுலாவின் அதிபராக இருந்த மதுரோவை அமெரிக்கா கைது செய்த நிலையில், தங்கள் நாடு வெளி அச்சுறுத்தல்கள் இல்லாமல், மரியாதை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு நிறைந்த சூழலில் வாழ விரும்புவதாக இடைக்கால அதிபர் டெல்சி தெரிவித்துள்ளார்.

இருநாடுகளும் பயன்பெறும் வகையில் இருதரப்பு வளர்ச்சி, பொருளாதாரம், நிலைத்தன்மை ஆகியவற்றை சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்டு கடைபிடிக்கவும் அமெரிக்க அரசிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்... வெனிசுலா போரை அல்ல... அமைதி பேச்சுவார்த்தையை விரும்புகிறது என்றும் டிரம்ப்பிடம் டெல்சி வலியுறுத்தியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்