USvsIran | War Tension | ட்ரம்ப் எச்சரிக்கை எதிரொலி - தயார் நிலையில் ஈரான் ஆயுதப்படைகள்

x

ட்ரம்ப் எச்சரிக்கை எதிரொலி - தயார் நிலையில் ஈரான் ஆயுதப்படைகள்

அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் தனது ஆயுதப்படைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை நோக்கி பெரும் கடற்படை படை அனுப்பப்படுவதாக கூறியதையடுத்து, ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டால், கடும் பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களும் இஸ்ரேலும் தாக்குதலை சந்திக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்