தரையிறங்கிய விமானத்தின் குறுக்கே வந்த ஜெட் விமானம் - பரபரப்பு காட்சிகள் | Chicago | USA | Flight

x

அமெரிக்காவின் சிகாகோ (Chicago) நகரில், விமானிகளின் சாதுர்யத்தால் இருவிமானங்கள் மோதி விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டுள்ளது. ஒமாஹாவில் (Omaha) இருந்து வந்த சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் போயிங் ரக விமானம், சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமானது. அப்போது, தனியார் வணிக ஜெட் விமானம் அனுமதியின்றி திடீரென ஓடுபாதையில் வந்துள்ளது. இதையடுத்து, சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் கடைசி நேரத்தில் தரையிறங்குவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாக, விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்