இனி சோசியல் மீடியாக்களில் அமெரிக்காவை விமர்சித்து பதிவு போட்டால்... உஷார்

x

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை கட்டாயம்

அமெரிக்கா செல்வதற்கு விசா பெற விண்ணப்பிக்கும்போது, புதிய நடைமுறை கட்டாயமாக்கப்படுள்ளது. விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, ஆவண சரிபார்த்தலுடன், விண்ணப்பதாரரின் கடந்த 5 ஆண்டு சமூக வலைத்தள பக்கங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. அவற்றில், அமெரிக்காவுக்கு எதிராக ஏதேனும் ஒரு கருத்து தெரிவித்திருந்தாலும், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மாணவர் விசாக்களுக்கு நேரடி முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், தொழிலாளர்களுக்கான H‑1B, L‑1, O‑1 விசாக்கள் மற்றும் பிசினஸ் விசாக்கள் ஆகியவை பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்