US Government ShutDown Update | கைமீறிய நிலைமையால் பேராபத்து - மொத்தமாக முடங்கியது அமெரிக்கா
அமெரிக்காவில் 6 ஆண்டுகளில் முதன் முறையாக அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவுக்கு 60 சதவீத உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசு செலவினங்களுக்கு நிதி விடுவிக்கப்படும். ஆனால், நிதி மசோதாவுக்கு ஆதரவாக அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் 53 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு அளித்ததால், அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால், விமான சேவை, ராணுவம் போன்ற அத்தியாவசிய துறைகளை சேர்ந்தவர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். அத்தியாவசியம் அல்லாத பணிகளில் ஈடுபடுவோர், கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவார்கள் அல்லது பணி நீக்கம் செய்யபடுவார்கள்.
Next Story
