அமெரிக்க தேசிய கீதத்தை கேலி செய்த கனடியர்கள்
கனடாவின் மாண்ட்ரீலில் Montreal நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு முன்பாக அமெரிக்க தேசிய கீதம் ஒலித்த போது மக்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்... கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகளவு எஃகு அனுப்பப்படும் நிலையில், இந்த வரி விதிப்பு கனடாவை கடுமையாக பாதிக்கும்...
அத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஆளுநர் என குறிப்பிட்டு, கனடாவை அமெரிக்க மாகாணங்களில் ஒன்றாக இணைக்க உள்ளதாக டிரம்ப் பேசியது பெரும் எதிர்ப்பலைகளை சந்தித்தது...
இந்த கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் மாண்ட்ரீலில் ஐஸ் ஹாக்கி விளையாட்டு போட்டி துவங்கும் முன் உள்ளூர் ரசிகர்கள் அமெரிக்க தேசிய கீதம் ஒலிக்கும்போது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்...
இப்போட்டியில் கனடாவை அமெரிக்கா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது...
