வரலாறு காணாத வெள்ளம்..புரட்டி போட்ட திடீர் மழை -119 பேர் மரணம் -மாயமான 180 பேர் கதி?

x

டெக்சாஸ் பெருவெள்ளம்...மாயமான 180 பேரின் கதி என்ன?

அமெரிக்காவின் டெக்சாஸ் Texas மாகாணத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மாயமான நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

டெக்சாஸில் உள்ள கெர் கவுண்டியில் Kerr County கொட்டித்தீர்த்த மழையால் குவாடலூப் Guadalupe ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 119 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் சேதமடைந்த நிலையில், இடிபாடுகளை அகற்றும் பணிகள் மற்றும் மாயமானவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, பேரிடர் ஏற்பட்டு 4 நாட்களை கடந்தும் 180க்கும் மேற்பட்டவர்களின் கதி என்னவென்று தெரியாத நிலையில், அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கவர்னர் கிரெக் அபோட் Gregg Abbott வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்