ஆரம்பமாகிறது கால்பந்து உலகக்கோப்பை திருவிழா கால்பந்து உலகக்கோப்பை மறக்க முடியாத தருணங்கள்

ஆரம்பமாகிறது கால்பந்து உலகக்கோப்பை திருவிழா கால்பந்து உலகக்கோப்பை மறக்க முடியாத தருணங்கள்
Summary
  • FOOTBALL.... கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிர்மூச்சு.... உணர்வோடு உணர்வாகக் கலந்தது.... அப்படிப்பட்ட ஒரு விளையாட்டின் சிகர நிகழ்வுதான் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் FIFA உலகக்கோப்பை…

  • உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான FIFA உலகக்கோப்பை தொடர் முதன் முதலில் 1930ஆம் ஆண்டு நடைபெற்றது.. அப்போதைய FIFA தலைவர் ஜூல்ஸ் ரிமெட் (Jules Rimet) எடுத்த முயற்சியால் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் சாத்தியமானது..

  • உருகுவே நாட்டில் நடைபெற்ற முதல் FIFA உலகக்கோப்பை தொடரில் 13 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை உருகுவே முத்தமிட்டது..

  • 1930 முதல் 2022ம் ஆண்டு வரை 22 FIFA உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் பிரேசில் 5 முறையும், ஜெர்மனி, இத்தாலி தலா 4 முறையும், அர்ஜென்டினா 3 முறையும், பிரான்ஸ், உருகுவே தலா 2 முறையும், இங்கிலாந்து, ஸ்பெயின் தலா ஒரு முறையும் கால்பந்து உலகக்கோப்பையை வசப்படுத்தியுள்ளன...

  • FIFA உலகக்கோப்பையில் பல்வேறு சுவாரஸ்யமான தருணங்கள், அதிர்ச்சியூட்டும் மோதல்கள் நடந்துள்ளன.....

  • 1986ம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அர்ஜென்டினா ஜாம்பவான் மரடோனா தனது கையால் தட்டிவிட்ட கோல் 'Hand of god' ஆக வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்தது...

  • அதே போட்டியில் 5 இங்கிலாந்து வீரர்களைத் தனியாகக் கடந்து சென்று மரடோனா அடித்த மற்றொரு கோல், 'நூற்றாண்டின் சிறந்த கோல்' என சிலாகிக்கப்படுகிறது.

  • 1958ம் ஆண்டு உலகக்கோப்பையில் வெறும் 17 வயதே நிரம்பிய பிரேசில் இளம் புயல் பீலே (Pele), தனது அசாத்திய திறமையால் பிரேசிலுக்கு முதல் உலகக்கோப்பையை வென்று தந்தார். 3 உலகக்கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற சாதனையும் பீலேவுக்கு மட்டுமே சொந்தம்....

  • 2006ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் ஜாம்பவான் சினிடேன் சிடேன் இத்தாலி வீரர் மடராசியின் நெஞ்சில் தலையால் முட்டியதால் red card பெற்று ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.. இந்த நிகழ்வை கால்பந்து ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள்....

  • 2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர் அர்ஜென்டினா ரசிகர்களால் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு மறக்கமுடியாத ஒரு தொடராக அமைந்தது..

  • ஆரம்பத்தில் சற்று சறுக்கினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் சீறிப்பாய்ந்த அர்ஜென்டினா, இறுதிப்போட்டியில் பிரான்ஸை சந்தித்தது....

  • முதல் பாதியில் 2 கோல்கள் அடித்து அர்ஜென்டினா முன்னிலை பெற்றது.. மெஸ்ஸி உலகக்கோப்பையை வெல்லப்போவது உறுதி என ரசிகர்கள் உற்சாகமாக இருந்த நேரத்தில், 2வது பாதியில் அர்ஜென்டினாவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தார் பிரான்ஸ் வீரர் கிலியான் எம்பாப்பே…

  • உச்சக்கட்ட பரபரப்பில் நடந்த இந்த போட்டியில் ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா வெற்றி பெற்று,

  • 3வது முறையாக மகுடம் சூடியது... மெஸ்ஸியின் பெருங்கனவும் நனவானது....

  • ஆரம்பத்தில் 13 அணிகளுடன் தொடங்கப்பட்ட கால்பந்து உலகக்கோப்பை, உலகளவில் கால்பந்தின் அசுர வளர்ச்சியால் தற்போது அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறும் தொடரில் 48 அணிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட திருவிழாவாக மாறியுள்ளது.

  • மெக்சிகோவில் உள்ள எஸ்டாடியோ பனோர்டே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் மெக்சிகோ - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன… நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் அல்ஜீரியாவை 16ம் தேதி எதிர்க்கொள்கிறது…

  • மெஸ்ஸி, ரொனால்டோ, லூகா மாட்ரிச் என ஒவ்வொரு அணியிலும் ஆதர்ச நாயகன்கள் அணிவகுத்து நிற்க ஒரு மாத காலத்திற்கு கால்பந்து ரசிகர்களுக்கு FIFA உலகக்கோப்பை தொடர் விருந்து படைக்கவுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com