வேலைவாய்ப்பின்மை மற்றும் விலை வாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்கான் மக்கள் புலம்பித் தவிக்கின்றனர். தலிபான்களின் ஆட்சிக்குப் பிறகு நிலைமை மோசமானதாகத் தெரிவிக்கும் அம்மக்கள், பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு எந்தவொரு ஒரு முன்னேற்றத்தையும் காணவில்லை என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.