

புவி வெப்பமயமாதல் வெகுவாக அதிகரிக்க உள்ளது பற்றி ஐ.நாவின் பருவநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு குழுமம் வெளியிட்ட
அறிக்கை எச்சரிக்கிறது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.பசுமை இல்ல வாயுகள் வெளியேற்றம் இன்று உள்ளது போல தொடர்ந்தால், 2100ஆம் ஆண்டில் உலகின் சராசரி வெப்ப அளவு, தொழில் புரட்சி ஏற்படுவதற்கு முன்பு இருந்த அளவை விட 2 டிகிரி அளவுக்கு அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. உலகின் சராசரி வெப்ப அளவு, 1850இல் இருந்ததை விட தற்போது 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.2040ஆம் ஆண்டிற்குள் இது 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும் என்று பருவநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு குழுமம் வெளியிட்ட அறிக்கை எச்சரிக்கிறது. புவி வெப்பமயதாலுக்கு காரணம் மனிதர்களின் நடவடிக்கைகள்
மட்டும் தான் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக
கூறுகிறது. தற்போது உலகின் பல பகுதிகளில் நிகழும் அதீத மழை பொழிவுகள், அதீத வெப்ப அலைகள், அதி தீவிர புயல்கள் போன்றவை மேலும்
தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.புவி வெப்பமயமாக்கலை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து 2017இல் அமெரிக்காவை டிரம்ப்
வெளியேறச் செய்தார். 2021இல் ஜோ பைடன் மீண்டும் அமெரிக்காவை அதில் இணைத்தார்.