உக்ரைன்-ரஷ்யா போர்.. 'நாளை..' ஜெலன்ஸ்கி வெளியிட்ட திடீர் வீடியோ

x

உக்ரைன்-ரஷ்யா இடையே நாளை அமைதிப் பேச்சுவார்த்தை

உக்ரைன்- ரஷ்யா இடையிலான அடுத்த அமைதிப் பேச்சுவார்த்தை புதன்கிழமை, துருக்கியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், உக்ரைன்-ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை புதன்கிழமை துருக்கியில் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளையும், கைதிகளை பரஸ்பரம் மாற்றிக் கொள்வதற்கான நடைமுறைகளையும் உக்ரைனின் தேசிய பாதுகாப்பு, ராணுவ கவுன்சில் தலைவர் ரஸ்டம் உமராவ் கவனித்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்