Ukraine | Russian | War | உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! உருக்குலைந்த நிலையில் சடலங்கள் மீட்பு

உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான சுமியில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. குருத்தோலை ஞாயிறு தினத்தில் குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ரஷ்யாவின் இந்த தாக்குதலால் சாலைகளில் சடலங்கள் சிதறிக் கிடக்கும் நிலையில், உக்ரைன் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com