Ukraine Russia War | ட்ரோன் தாக்குதல் மூலம் உக்ரைனின் எண்ணெய் கிடங்கை அழித்த 'ரஷ்யா'

x

உக்ரைன் நாட்டின் செர்னிஹிவ் (Chernihiv) பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கை, ரஷ்ய ட்ரோன்கள் தாக்கியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக உக்ரைனின் செர்னிஹிவ் பகுதி அரசு உயர் அதிகாரியான வியாசெஸ்லாவ் சாஸ் (Vyacheslav Chaus) பகிரங்கமாக குற்றம் சுமத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் எண்ணெய் கிடங்கு முழுவதும் கொளுந்து விட்டு எரிந்த நிலையில், பலத்த சேதம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இந்த சம்பவத்தால், ரஷ்யா - உக்ரைன் எல்லைப்பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்