Ukraine Russia War | Drone Attack | மாறி மாறி வெறியாட்டம் - உக்கிரமான ரஷ்யா - உக்ரைன் மோதல்
மாறி மாறி வெறியாட்டம் - உக்கிரமான ரஷ்யா - உக்ரைன் மோதல்
Ukraine Russia War | Drone Attack | மாறி மாறி வெறியாட்டம் - உக்கிரமான ரஷ்யா - உக்ரைன் மோதல் உக்ரைனின் ராணுவ விமான நிலைய கட்டமைப்புகள் மீது தாக்குதல் உக்ரைனின் ராணுவ விமான நிலையத்தின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ஆற்றல், போக்குவரத்து வசதிகள், உக்ரைன் படைகள் மற்றும் வெளிநாட்டு போராளிகள் தங்கியிருந்த இடங்களும் குறிவைக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், உக்ரைன் அனுப்பிய 72 ட்ரோன்களையும், 3 குண்டுகளையும் ரஷ்ய விமான பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், உக்ரைன் விமானப்படை 116 ரஷ்ய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.
