வெள்ளத்தில் மிதக்கும் வாஷிங்டன்.. வீட்டின் மேற்கூரையில் தவித்த இருவர் மீட்பு..

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் மழை வெள்ளத்தால் வீட்டின் மேற்கூரையில் ஆதரவின்றி தவித்த இருவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். வாஷிங்டன் மாகாண வடமேற்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீதியெங்கும் வெள்ளக்காடாக மாறியதால், மொட்டை மாடியில் தஞ்சமடைந்த இருவர், ஹெலிகாப்டர் மூலம் கயிறுகட்டி மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com