இலங்கையில் உள்ள பின்னவாலா யானை காப்பகத்தில் இருக்கும் ஒரு யானை இரட்டை ஆண் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது. அங்கு 1941ஆம் ஆண்டில் ஒரு யானை இரட்டை யானை குட்டிகளை ஈன்றது. 80 ஆண்டுகளுக்கு பிறகு இந்த காப்பகத்தில் மீண்டும் இரட்டை குட்டிகள் பிறந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.