நிலநடுக்கம் - 33 மணி நேரத்திற்கு பின் 70 வயது முதியவர் மீட்பு

துருக்கியில் நில நடுக்கத்தில் சிக்கிய முதியவரை 33 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு குழுவினர் மீட்டு உள்ளனர். இஸ்மிர் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் கலைந்த சீட்டு கட்டுகள் போல் சரிந்து விழுந்தன.
நிலநடுக்கம் - 33 மணி நேரத்திற்கு பின் 70 வயது முதியவர் மீட்பு
Published on
துருக்கியில் நில நடுக்கத்தில் சிக்கிய முதியவரை 33 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு குழுவினர் மீட்டு உள்ளனர். இஸ்மிர் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் கலைந்த சீட்டு கட்டுகள் போல் சரிந்து விழுந்தன. கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், 70 வயது முதியவர் 33 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்க பட்டுள்ளார். நிலநடுக்கத்தில் இதுவரை 57 பேர் இறந்துள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 896 பேரில் 682 பேர் வீடு திரும்பி உள்ளதாகவும் துருக்கி துணை அதிபர் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com