அமெரிக்க ஐ.டி. நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. இந்தியர்களுக்கு பாதிப்பு?

x

அமெரிக்க ஐ.டி. நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. இந்தியர்களுக்கு பாதிப்பு? - டிரம்பின் பிளான் என்ன?

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் சீனாவில் தங்களது தொழிற்சாலைகளை கட்டி எழுப்பி, இந்தியர்களைப் பணியில் அமர்த்தி, அதிக லாபத்தை குவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இனி அமெரிக்கர்களுக்கே அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதற்கான சீர்திருத்தங்களையும், நேரடி அழுத்தங்களையும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவரது தலைமையிலான நிர்வாகம் கொடுக்கும் என்று தெரிகிறது. வாஷிங்டனில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவர், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்றும், அனைத்து விவகாரங்களிலும் அமெரிக்காவையே முதன்மையாக வைத்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் இனி google மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் இனி எதிர்காலத்தில் இந்தியர்கள் பணி அமர்த்தப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்