America Donald Trump | Tik Tok | டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

x

அமெரிக்காவில் டிக்-டாக் (tiktok) செயலியை தடை செய்வதற்கான காலக்கெடுவை மேலும் 90 நாட்களுக்கு அதிபர் டிரம்ப் நீட்டித்துள்ளார். அமெரிக்காவில் முந்தைய அதிபர் பைடன் ஆட்சியில் தேச பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டது. சீன நிறுவனம் வேறொரு நிறுவனத்துக்கு டிக்-டாக் செயலியின் உரிமையை விற்காவிட்டால் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று அப்போது சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு, அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப்,, டிக்-டாக் செயலி விவகாரத்தில் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார். ஏற்கனவே 2 முறை டிக்-டாக் செயலி தடைக்கான காலக்கெடுவை டிரம்ப் நீட்டித்தார். இந்நிலையில் 3வது முறையாக காலக்கெடுவை நீட்டித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்