Trump | "இன்னும் 48 மணி நேரத்தில்.." - கடைசி வார்னிங் கொடுத்த டிரம்ப்
48 மணி நேரத்தில் ஹார்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் - டிரம்ப் கெடு ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) அடுத்த 48 மணி நேரத்திற்குள் மீண்டும் திறக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாமல் கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்க வேண்டும் எனவும், இல்லையெனில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும், முதலில் மிகப்பெரிய மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து தாக்குதல் தொடங்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
